எழுவர் கால்பந்து போட்டிகள் எம்.எஸ்.பி., பள்ளி வெற்றி
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், ஹோட்டல் ஸ்வாகத் கிராண்ட் இணைந்து நடத்தும் ஹோட்டல் ஸ்வாகத் கோப்பை 2ம் ஆண்டு மாவட்ட அளவிலான 13 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான எழுவர் கால்பந்து போட்டிகள் மார்ச் 15 ம் தேதி தொடங்கியது.
போட்டிகள் பார்வதீஸ் அனுகிரஹா மைதானத்தில் நடந்தன. திண்டுக்கல் பிரஸித்தி வித்யோதயா கால்பந்து அணிக்கு எதிரான போட்டியில் 4:0 என்ற கோல் கணக்கில் எம்.எஸ்.பி., சோலைநாடார் நினைவு பள்ளி வென்றது. வசந்த் 3, லோஷன் ஆகியோர் கோல் அடித்தனர். ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளிக்கு எதிரான போட்டியில் பார்வதீஸ் அனுகிரஹா பள்ளி அணி 3:2 என்ற கோல் கணக்கில் வென்றது. டுடோ 2, கவின்ஜெய் ஆகியோரும், வாசவி அணியில் பிராணேஷூம் கோல் அடித்தனர். ஸ்.பி.சி., அகாடமி கால்பந்து அணிக்கு எதிரான போட்டியில் எஸ்.எஸ்.எம்., அகாடமி அணி 5:0 என்ற கோல் கணக்கில் வென்றது. கபிலேஷ் 2, கவிஷ் 2, பிரட்லி கோல் அடித்தனர். எம்.எஸ்.பி., சோலைநாடார் பள்ளி அணிக்கு எதிரான போட்டியில் 2:1 என்ற கோல் கணக்கில் பார்வதீஸ் அனுகிரஹா அணி வென்றது. ருகன்ஜீ, டுடோ கோல் அடித்தனர்.
எம்.எஸ்.பி., அணியில் வசந்த் கோல் அடித்தார். எம்.எஸ்.பி.. சோலை நாடார் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளி அணி 3:0 என்ற கோல் கணக்கில் வென்றது. பிரனேஷ். தருண்சஞ்சய், சந்தோஷ் கோல் அடித்தனர். செயின்ட் மேரிஸ் பள்ளி கால்பந்து அணி மற்றும் ஸ்ரீகுருமுகி வித்யாஸ்ரமம் பள்ளி அணிக்குமிடையேயான போட்டி 1:1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
ஜோவின், காவியன் கோல் அடித்தனர். பண்ணை பப்ளிக் பள்ளி கால்பந்து அணிக்கு எதிரான போட்டியில் எஸ்.எஸ்.எம்., அகாடமி அணி 5:1 என்ற கோல் கணக்கில் வென்றது.
கபிலேஷ் 4, கவிஷ் மற்றும் பண்ணை அணியில் சாய்சிஷி கோல் அடித்தனர். அக்சுதா அகாடமி அணிக்கு எதிரான போட்டியில் 3:0 என்ற கோல் கணக்கில் எஸ்.எஸ்.எம்., அகாடமி அணி வென்றது. கபிலேஷ் 2, கவிஷ் ஆகியோர் கோல் அடித்தனர்.
மேலும்
-
கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு பாதி விலையில் விற்ற ஆறு பேர் கைது
-
தடை செய்யப்பட்ட இடங்களில் அடாவடி கடைகளால் நெரிசல் வருவாய் கிடைப்பதால் நடவடிக்கையில் அலட்சியம்
-
சொத்து வரியாக ரூ.2,123 கோடி வசூல்
-
அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை ஐ.பி.எஸ்., அதிகாரி பாராட்டு
-
கோடைகால நீச்சல் பயிற்சி துவக்கம்
-
பேட்டரி திருடியோர் சிக்கினர்