பாலியல் துன்புறுத்தலை தடுக்க பெற்றோர் செய்ய வேண்டியதென்ன?
கோவை; கோவை பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இதில் பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் நஸ்ரின் பேசியதாவது:
ஆண், பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அதனை தடுக்கும் சட்டங்கள் பற்றியும் பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகள் முன்பு சண்டை போடக்கூடாது. குழந்தைகளிடம் தினமும் அரை மணி நேரமாவது பேச வேண்டும்.
மாலையில் குழந்தைகளிடம், காலையிலிருந்து பள்ளி வேலை நேரத்தில் என்னென்ன நடந்தது யாரிடம் என்ன பேசினாய், வழியில் யாரைப் பார்த்தாய் என்பது பற்றி கேட்பது அவசியம். குழந்தைகள் முன்பின் தெரியாத நபர்களிடம், கவனமுடன் பழக வேண்டும் என, சொல்லிக்கொடுக்க வேண்டும்.
ஏதேனும் தின்பண்டமோ, பொருட்களோ கொடுத்து, தொட்டு பேசினால் உடனே பெற்றோர்களிடமோ, ஆசிரியரிடமோ கூறுமாறு குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் மொபைல் போனில் யாரிடம் பேசுகிறார்கள், என்னென்ன பார்க்கிறார்கள் என்றும் கவனிக்க வேண்டும். பாலியல் குற்றங்கள் குறித்து, ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
வட்டார கல்வி அலுவலர் ரமேஷ்பாபு, கவுன்சிலர் அம்பிகா தனபால், பள்ளி தலைமை ஆசிரியர் சகுந்தலா மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.

மேலும்
-
கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு பாதி விலையில் விற்ற ஆறு பேர் கைது
-
தடை செய்யப்பட்ட இடங்களில் அடாவடி கடைகளால் நெரிசல் வருவாய் கிடைப்பதால் நடவடிக்கையில் அலட்சியம்
-
சொத்து வரியாக ரூ.2,123 கோடி வசூல்
-
அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை ஐ.பி.எஸ்., அதிகாரி பாராட்டு
-
கோடைகால நீச்சல் பயிற்சி துவக்கம்
-
பேட்டரி திருடியோர் சிக்கினர்