மா.கம்யூ., மாநாட்டு பேரணி ஒத்திகை

கோவை; கோவை மாவட்ட மா.கம்யூ., சார்பில், அகில இந்திய மாநாட்டுக்கான பேரணி ஒத்திகை நேற்று நடந்தது.

மா.கம்யூ., 24வது அகில இந்திய மாநாடு, அடுத்த மாதம் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை மதுரையில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் பேரணி நடக்க உள்ளது. இதில் கோவை மாவட்ட மா.கம்யூ., சார்பில், 300க்கு மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த பேரணிக்கான ஒத்திகை, கோவை பாலசுந்தரம் ரோட்டில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், கோவை முன்னாள் எம்.பி., நடராஜன், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பத்மநாபன் மற்றும் பேரணி ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன் ஆகியோர், தொண்டர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றனர்.

Advertisement