கழிப்பறை வசதியின்றி பக்தர்கள் அவதி

தொண்டி : தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயில் அருகே கழிப்பறை வசதியில்லாததால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

தொண்டியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத உந்திபூத்தபெருமாள் கோயில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை சார்பில் தினமும் அன்னதானம் நடக்கிறது. வாரந்தோறும் சனி அன்று பெண் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கழிப்பறை வசதியில்லாததால் சிரமம் அடைந்துள்ளனர்.

பக்தர்கள் கூறுகையில், உந்திபூத்த பெருமாளை தரிசனம் செய்தால் திருமணதடை, நோய்கள் மற்றும் தோஷங்கள் நீங்குவதாக ஸ்தல வரலாறு உள்ளது. கோயில் உள்ளே ஆஞ்சநேயர், ராமானுஜர், கருப்பர், கருடர், கிருஷ்ணர் சன்னதிகளும் உள்ளன. இங்கு அன்னதானத்திற்கு வரும் பக்தர்களுக்கு இடவசதியில்லை. இக் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கழிப்பறை மற்றும் அன்னதானம் கூடம் அமைத்தால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement