புதிய பஸ் வழித்தடம்தொடங்கி வைப்பு
புதிய பஸ் வழித்தடம்தொடங்கி வைப்பு
குளித்தலை:குளித்தலை அடுத்த, ஆதனுார் பஞ்., மேட்டுப்பட்டியில், 13.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ரேஷன் கடை திறக்கப்பட்டது. கடவூர் தெற்கு ஒன்றிய செயலர் சுதாகர் தலைமை வகித்தார். கடவூர் யூனியன் கமிஷனர் முத்துக்குமார், சுரேஷ்குமார், ஒன்றிய பொறியாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரேஷன் கடையை எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி திறந்து வைத்தார்.
இதேபோல், முதல்வரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 35 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு, அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதையடுத்து எருதிக்கோன்பட்டியில், கோவை முதல் திருச்சி வரை செல்லும் அரசு பஸ்சின் புதிய வழித்தடத்தின் துவக்க விழா நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement