சிருங்கேரி மடத்தில் திருநட்சத்திர விழா

மதுரை : சிருங்கேரி சாரதா பீடம் 36வது பீடாதிபதி பாரதிதீர்த்த மஹாசுவாமிகளின் 75வது திருநட்சத்திர விழா ஏப்.3 ல்கர்நாடக மாநில சிருங்கேரி மடம் உட்பட நாட்டின் அனைத்து சிருங்கேரி சங்கர மடங்களிலும் கொண்டாடப்படுகிறது.

மதுரை பைபாஸ் ரோடு சிருங்கேரி சங்கர மடத்தில் நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய இவ்விழா 33 வேத விற்பன்னர்களால் ஏப்.2 வரை நடக்கிறது. ஏப்.3 ஆயுஷ் ஹோமம், மிருத்தியுஞ்சய ஹோமம், ருத்ர ஹோமம் ஆகியவை நடக்கின்றன. அன்று அன்னதானம் வழங்கப்படுகிறது.

மாலையில் சிருங்கேரி சாரதா பீடத்தின் 25வது பீடாதிபதிசச்சிதானந்த பாரதிமஹா சுவாமிகளால் இயற்றப்பட்ட மீனாட்சி ஸதகம் 122 ஸ்லோகங்கள் மடத்தின் சிஷ்யர்களால் சமர்ப்பிக்கப்படுகிறது. ஏப்.4 காலை 8:00 மணிக்கு அம்மன் சன்னதி சிருங்கேரி மடத்தில் விஸ்வேஸ்வரருக்கு சிவ சஹஸ்ரநாம லட்சார்ச்சனை நடக்கிறது.

Advertisement