பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி வெற்றி


கோல்கட்டா: பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை கோல்கட்டா அணி வீழ்த்தியது.



18 வது பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ஐதராபாத் மற்றும் கோல்கட்டா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் 'பவுலிங்' செய்ய முடிவு செய்தது.

தொடர்ந்து களமிறங்கிய கோல்கட்டா அணியின் துவக்க வீரர்கள் குயின்டன் டி காக்(1), சுனில் நரேன்(7) ரன்னில் அவுட்டானார்கள்.
அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானே மற்றும் ரகுவன்ஷி அதிரடி காட்டினர். ரஹானே 38 ரன்னிலும், ரகுவன்ஷி 50 ரன்னிலும் அவுட்டானார்கள்.

பிறகு வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிங்கு சிங்கும் வேகமாக ரன்களை குவித்தனர். கடைசி ஓவரில் வெங்கடேஷ் ஐயர் 60, அண்ட்ரே ரசல் 1 ரன்னில் அவுட்டாக, இறுதியில் கோல்கட்டா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது.

ஐதராபாத் அணியின் முகமது ஷமி, அன்சாரி, படேல், மெண்டிஸ், பாட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


201 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய ஐ தராபாத் அணி துவக்கத்திலிருந்து விக்கெட்டுகள் மளமளவென சரியத்துங்கின. ஒரு கட்டத்தில் 13 வது ஓவரிலேயே 103 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி திணறியது.
தொடர்ந்து அந்த அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து120 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹெ ன்ரிச் க்லாசன் 33 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் கோல்கட்டா அணி வெற்றி பெற்றது.

Advertisement