காங்., எம்.பி., பிரியங்கா வாகனத்தை வழி மறித்த சேட்டை வாலிபர் கைது

15

திருச்சூர்: கேரளாவில் காங்., எம்.பி., பிரியங்கா வாகனத்தை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட யுடியூபர் அனீஷ் ஆபிரகாமை போலீசார் கைது செய்தனர்.


வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா தனது தொகுதி மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் மலப்புரம் வந்தூரில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.


அப்போது மன்னுத்தி பைபாஸ் சந்திப்பில், பிரியங்கா சென்ற காரை வழிமறித்து வாலிபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மன்னுத்தி போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். ஏலநாடு பகுதியை சேர்ந்த யுடியூபர் அனீஷ் ஆபிரகாம் என்பது தெரியவந்தது. அந்த வாலிபரின் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.



காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா சென்ற காரை திடீரென வழிமறித்த காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அனீஷ் ஆபிரகாமை போலீசார் ஜாமினில் விடுவித்தனர். அதேநேரத்தில், எம்.பி., பிரியங்காவின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

Advertisement