குடிநீரில் கழிவு நீர் கலப்பு அதிகாரிகள் துரித நடவடிக்கை

புதுச்சேரி : உருளையான்பேட்டையில் குடிநீரில் கழிவு நீர் கலப்பது தொடர்பான புகாரையடுத்து பொதுப்பணித்துறை ஊழியர்கள் உடனடியாக சரி செய்தனர்.

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட லுாயி பிரகாசம் வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள நகர பகுதிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவி வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் எதிர்க்கட்சி தலைவர் சிவாவிடம் புகார் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து தொகுதி செயலாளர் சக்திவேல், குடிநீரில் கழிவு நீர் கலப்பதை சரி செய்யவேண்டி பொதுப்பணி துறை செயற்பொறியாளர் உமாபதியிடம் மனு வழங்கினர்.

உடன் உதவி பொறியாளர் அன்பரசன், இளநிலை பொறியாளர் வெங்கடேசன், மேற்பார்வையாளர் கணேசன் ஆகியோரை அழைத்து உடனடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதன் பேரில் பாதிக்கப்பட்ட இடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு குடிநீரில் கழிவுநீர் கலக்கு இடத்தை கண்டறிந்து சரிசெய்யும் பணியினை மேற்கொண்டனர்.

Advertisement