திருமண உதவித்தொகை பயனாளிகளுக்கு வழங்கல்

புதுச்சேரி : வில்லியனுார் தொகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நலத்துறை சார்பில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மொபட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகள் 12 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மொபட் வழங்கினார். தொடர்ந்து, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் 21 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகையாக தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதில், சமூக நலத்துறை இணை இயக்குநர் ஆறுமுகம், கண்காணிப்பாளர் திருமுருகன், அதிகாரிகள் பிரதாப், ஆனந்த், அன்பரசன், தி.மு.க., தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் செல்வநாதன், அவைத்தலைவர் ஜலால், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வண்டிப்பாளையம் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
-
உயர்கல்வி வழிகாட்டுதல் 5ம் தேதி ஆலோசனை முகாம்
-
மலட்டாற்றில் தடுப்பு சுவர் : சபா ராஜேந்திரன் கோரிக்கை
-
உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
விருதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
-
நெய்வேலியில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
Advertisement
Advertisement