யூகி பாம்ப்ரி 'நம்பர்-1': டென்னிஸ் தரவரிசையில் முன்னேற்றம்

புதுடில்லி: டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது.

இரட்டையரில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, 37வது இடத்தில் இருந்து முதன்முறையாக 26வது இடத்துக்கு முன்னேறினார். துபாய் சாம்பியன்ஷிப் இரட்டையரில் கோப்பை வென்ற பாம்ப்ரி, இந்தியன் வெல்ஸ், மயாமி ஓபனில் காலிறுதி வரை சென்றிருந்தார்.
மற்றொரு இந்திய வீரர் ரோகன் போபண்ணா, 21வது இடத்தில் இருந்து 44வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனையடுத்து இந்தியாவின் 'நம்பர்-1' வீரரானார் யூகி பாம்ப்ரி. கடந்த 2019 முதல், முதலிடத்தில் இருந்த போபண்ணாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, 60வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் ஜீவன் நெடுஞ்செழியன், 110வது இடத்தில் இருந்து 100வது இடத்துக்கு முன்னேறினார்.

Advertisement