நிலநடுக்கத்தால் அதிர்ந்த பாகிஸ்தான்; ஆப்கானிஸ்தான், திபெத்திலும் நில அதிர்வு

இஸ்லாமாபாத்; பாகிஸ்தானில் அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தான், திபெத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டது.



பாகிஸ்தானில் அதிகாலை 2.58 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானது. இதை இந்திய தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.


பலுசிஸ்தானின் உத்தாலுக்கு கிழக்கு, தென்கிழக்கே 65 கி.மீ., தொலையில் 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.


பாகிஸ்தானை போன்று ஆப்கானிஸ்தான், திபெத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் 4.7 ரிக்டர் அளவிலும், திபெத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.41 மற்றும் 5.49 மணிக்கு அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டது. இவை இரண்டும் முறையே 3.8, 4.3 என ரிக்டரில் பதிவானது.

Advertisement