உலக அரசியலில் முக்கிய தலைவர்; பிரதமர் மோடிக்கு சிலி அதிபர் போரிக் பாராட்டு

புதுடில்லி: 'பிரதமர் மோடி, உலக தலைவர்கள் அனைவருடனும் பேசக் கூடியவர். உலக புவிசார் அரசியலில் முக்கிய தலைவர்' என சிலி அதிபர் கேப்ரியல் போரிக் பாராட்டி உள்ளார்.
தென் அமெரிக்க நாடான சிலியின் அதிபர் கேப்ரியல் போரிக் பான்ட், ஐந்து நாள் பயணமாக டில்லிக்கு வந்தார். அவருடன், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், தொழிலதிபர்களும் வந்துள்ளனர். டில்லியில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார்.
ராஷ்டிரபதி பவனில் சிலி அதிபர் கேப்ரியல் போரிக் பேசியதாவது: பிரதமர் மோடி அவர்களே, இன்று நீங்கள் உலகத் தலைவர்கள் அனைவருடனும் பேசக்கூடிய தகுதியைப் பெற்றுள்ளீர்கள். டிரம்ப், ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியம், கிரீஸ் அல்லது ஈரான், லத்தீன் அமெரிக்க தலைவர்களுக்கு நீங்கள் ஆதரவளிக்கிறீர்கள்.
இதை வேறு எந்த தலைவரும் இத்தகைய நிலையில் இல்லை. இன்றைய புவிசார் அரசியல் சூழலில் நீங்கள் ஒரு முக்கிய தலைவராக இருக்கிறீர்கள். ரஷ்யாவின் புடின், உக்ரைனின் ஜெலன்ஸ்கி உடன் பேச முடியும். இது வேறு எந்தத் தலைவராலும் இப்போது செய்ய முடியாத ஒன்று. உலகிற்கு அமைதியைக் கொண்டுவருவதில் இந்தியா உறுதியாக உள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் உள்ளது. இந்தியாவில், நீங்கள் வறுமை மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடுகிறீர்கள். இந்தியாவில், உலகில் அமைதியைக் காக்க நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். இவ்வாறு சிலி அதிபர் கூறினார்.


மேலும்
-
பிளஸ் டூ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 23 பேர் மீது வழக்கு
-
சமையல் காஸ் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்
-
அமைச்சர்கள் வழக்கு: தொடர்கிறது நீதிபதிகள் விலகல்!
-
கச்சத்தீவு விவகாரத்தில் சட்டசபையில் முதல்வர் தவறான தகவல்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
நான் உயிருடன் இருக்கும் வரை நடக்காது: பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மம்தா ஆறுதல்
-
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரிடம் நக்சல்கள் 26 பேர் சரண்!