கிரெய்க் பிராத்வைட் விலகல்: டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பிராத்வைட் விலகினார்.

கடந்த 2021ல் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக கிரெய்க் பிராத்வைட் 32, நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய 39 டெஸ்டில், 10 வெற்றி, 7 'டிரா', 22 தோல்வியை பெற்றது.


ஆஸ்திரேலிய மண்ணில் 27 ஆண்டுகளுக்கு பின் (2024, பிரிஸ்பேன்) டெஸ்ட் வெற்றி பெற்றுத்தந்த இவர், பாகிஸ்தானில் 34 ஆண்டுகளுக்கு பின் (2025, முல்தான்) டெஸ்டில் வெற்றி தேடித்தந்தார்.
இந்நிலையில், பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பிராத்வைட் விலகினார். இதுவரை 98 டெஸ்டில் விளையாடிய இவர், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தனது 100வது டெஸ்டில் விளையாட உள்ளார். புதிய கேப்டன் விரைவில் அறிவிக்கப்படும் என கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் தெரிவித்தது.


'டி-20' அணியின் கேப்டன் பதவியில் இருந்து ராவ்மன் பாவெல் நீக்கப்பட்டு, ஷாய் ஹோப் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே ஹோப், ஒருநாள் போட்டி அணிக்கு கேப்டனாக உள்ளார்.

Advertisement