ரிக்கல்டன் அதிரடி ஆட்டம் : மும்பை அணி அபார வெற்றி

மும்பை: கோல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
18 வது பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12 வது போட்டி, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்தது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கோல்கட்டா அணியும் மும்பை அணியும் மோதின.
டாஸ் வென்ற மும்பை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் அஸ்வனி குமாருக்கு புதிதாக வாய்ப்பு அளிக்கப்பட்டது. விக்னேஷ் புத்தூரும் வாய்ப்பு பெற்றார்.
கோல்கட்டா அணியில், மொயின் அலிக்கு பதில் சுனில் நரைனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
திணறிய கோல்கட்டா வீரர்கள்:
இந்நிலையில் முதலில் களமிறங்கிய கோல்கட்டா அணியின் துவக்க ஆட்டக்காரர்களான குயின்டன் டி காக் ஒரு ரன்னில் சஹார் பந்தில் அவுட் ஆனார். சுனில் நரைன் ரன் எடுக்காமல் போல்ட் பந்தில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த கேப்டன் ரகானே சோபிக்கவில்லை 11 ரன்களில் அஸ்வனி குமார் பந்தில் வெளியேறினார். ரகுவன்ஷி சிறிது நேரம் தாக்கு பிடித்து விளையாடி 26 ரன்கள் சேர்த்த நிலையில் பாண்ட்யா பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த வெங்கடேஷ், 3 ரன்னில் சஹார் பந்தில் அவுட் ஆனார். ரிங்கு சிங், அஸ்வனி குமார் பந்தில் 17 ரன்களுக்கு வெளியேறினார்.
மணிஷ் பாண்டே 19 ரன்களில் அஸ்வனி குமார் பந்தில் போல்டானார்.
அடுத்து வந்த ரஸ்ஸல் 5 ரன் எடுத்தபோது அஸ்வனி குமார் பந்தில் போல்டானார்.
ஹர்ஷித் ரானா, 4 ரன்னில் விக்னேஷ் புத்துார் பந்தில் அவுட் ஆனார்.
ராமன் தீ்ப் சிங் 22 ரன்களில் சாண்ட்னர் பந்தில் அவுட் ஆக, கோல்கட்டா அணி, 16.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 116 ரன்களுக்கு சுருண்டது.
அஸ்வனி குமார் 4 விக்கெட்:
கோல்கட்டா அணியின் கேப்டன் ரஹானே, ரிங்கு சிங், மணிஷ் பாண்டே மற்றும் ரஸ்ஸல் ஆகியோரை புதிதாக வந்த அஸ்வனி குமார், வீழ்த்தி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
இந்நிலையில் மும்பை அணிக்கு 117 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கோல்கட்டா அணி.
117 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு அடுத்து களமிறங்கிய மும்பை அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 13 ரன்களில் ரஸல் பந்தில் அவுட் ஆனார்.
ரியான் ரிக்கல்டன் அதிரடி ஆட்டம்:
அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கல்டன் அரை சதம் கடந்து ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் சேர்த்தார். அவருடன் இணைந்து விளையாடிய சூர்ய குமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இறுதியில் மும்பை அணி, 12.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத்தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.
மேலும்
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!
-
கச்சத்தீவை மீட்க வேண்டும்; சட்டசபையில் முதல்வர் தனி தீர்மானம்
-
இன்ஸ்டாகிராமில் சேட்டை பதிவு: நெல்லையில் வாலிபர்கள் கைது
-
இறந்தவரின் பர்சில் பணம் லபக்கிய எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
-
மஹா.,வில் சாலை விபத்து; 5 பேர் பலி; 20 பேர் காயம்!
-
உலக அரசியலில் முக்கிய தலைவர்; பிரதமர் மோடிக்கு சிலி அதிபர் போரிக் பாராட்டு