விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி இடித்து புதிதாக கட்ட கோரிக்கை

மறைமலைநகர் மறைமலைநகர் அடுத்த கலிவந்தபட்டு கிராமத்தில், சிதிலமடைந்து உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி, புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறைமலைநகர் நகராட்சி 10வது வார்டு கலிவந்தபட்டு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் மறைமலைநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, நகராட்சி சார்பில் இங்குள்ள ஏரியில் கிணறு அமைத்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வாயிலாக தினமும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கலிவந்தபட்டு - - மறைமலைநகர் செல்லும் சாலையில், 25 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தற்போது மிகவும் சிதிலமடைந்து, துாண்களில் உள்ள சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து காணப்படுகிறது.
எனவே, அபாய நிலையில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!
-
கச்சத்தீவை மீட்க வேண்டும்; சட்டசபையில் முதல்வர் தனி தீர்மானம்
-
இன்ஸ்டாகிராமில் சேட்டை பதிவு: நெல்லையில் வாலிபர்கள் கைது
-
இறந்தவரின் பர்சில் பணம் லபக்கிய எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
-
மஹா.,வில் சாலை விபத்து; 5 பேர் பலி; 20 பேர் காயம்!
-
உலக அரசியலில் முக்கிய தலைவர்; பிரதமர் மோடிக்கு சிலி அதிபர் போரிக் பாராட்டு