செங்காடூரில் உயர்மட்ட பாலம் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

செய்யூர்,
செய்யூர் அடுத்த செங்காட்டூர் கிராமத்தில் பவுஞ்சூர் -- செய்யூர் இடையே செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இரண்யசித்தி, திருப்புறக்கோவில், புதுப்பட்டு, அம்மனுார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த நெடுஞ்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இருசக்கர வாகனங்கள், கார், லாரி, பேருந்து என, தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் கடந்து செல்கின்றன.
ஆண்டுதோறும் மழைக்காலத்தில் செங்காட்டூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், இந்த நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. மேலும், மண் அரிப்பும் ஏற்படுவதால், சாலை கடுமையாக சேதமடைந்து, இவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தவிக்கின்றனர்.
இந்த வகையில், பல ஆண்டுகளாக மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிப்படுவது தொடர்கிறது. வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து துண்டிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்க, உபரிநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மேலும், திருப்புறக்கோவில் - செங்காட்டூர் இடையே உயர்மட்ட பாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
இன்ஸ்டாகிராமில் சேட்டை பதிவு: நெல்லையில் வாலிபர்கள் கைது
-
இறந்தவரின் பர்சில் பணம் லபக்கிய எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
-
மஹா.,வில் சாலை விபத்து; 5 பேர் பலி; 20 பேர் காயம்!
-
உலக அரசியலில் முக்கிய தலைவர்; பிரதமர் மோடிக்கு சிலி அதிபர் போரிக் பாராட்டு
-
நிலநடுக்கத்தால் அதிர்ந்த பாகிஸ்தான்; ஆப்கானிஸ்தான், திபெத்திலும் நில அதிர்வு
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்; பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கும் முதல்வர் ஸ்டாலின்