தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்


ஈரோடு:ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில், தீர்த்தக்குட ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலம், ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ்.வீதி, ப.செ.பார்க் வழியே பெரிய மாரியம்மன் கோவிலை அடைந்தது.
பக்தர்கள் குடத்தில் வேப்பிலையுடன் புனிதநீரை எடுத்து வந்து கம்பம், அம்மன் அபிஷேகத்துக்கு அளித்தனர். நில மீட்பு இயக்கத்தின் தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். துணை தலைவர் கைலாசபதி, பொருளாளர் ராஜ் கண்ணன், பொது செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தனர்.
பெரிய மாரியம்மன் கோவில் அருகே அரசு புறம்போக்கில் உள்ள, 12.66 ஏக்கரை மீட்டு ஹிந்து பக்தர்கள் மீது கரிசனம், அக்கறை கொண்டு கோவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 80 அடி சாலை திட்டத்தை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
ஊர்வலத்தில் மொடக்குறிச்சி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி மற்றும் ஆண், பெண் பக்தர்கள், சிறுவர்-சிறுமியர், நில மீட்பு இயக்கத்தினர், ௫௦௦க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement