கொடுமுடி எழுத்தாளருக்கு'துாய தமிழ் பற்றாளர் விருது'



கொடுமுடி எழுத்தாளருக்கு'துாய தமிழ் பற்றாளர் விருது'


ஈரோடு:கொடுமுடி, வடக்கு புதுப்பாளையத்தை சேர்ந்த வ.கோ.சுப்பிரமணியம் மகள் யசோதா நல்லாள், 37; இளம் எழுத்தாளரான இவர், 'சங்க இலக்கியத்தில் கண்கள்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு, 'கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை ஆய்வில் கவுரவ முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இவருக்கு, 2024ம் ஆண்டுக்கான 'துாய தமிழ் பற்றாளர் விருது' கிடைத்துள்ளது. சென்னையில் நடந்த விழாவில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன், இவ்விருதை வழங்கினார்.
விருது பெற்ற யசோதா நல்லாள் கூறியதாவது: துாய தமிழ் பற்றாளர் விருதுக்கு, ஈரோடு மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தேன். எனது தமிழ் புலமை, சான்றிதழ் அடிப்படையில் தேர்வாகி விருதுடன், 20,000 ரூபாய் ரொக்கப்பரிசும் பெற்றேன். இவ்வாறு கூறினார்.
நில மீட்பு இயக்கத்தினர்

Advertisement