தக்காளி விலை திடீர் உயர்வு



தக்காளி விலை திடீர் உயர்வு


ஈரோடு:ஈரோடு வ.உ.சி., பூங்கா தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதி, தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளி, காய்கறி தினமும் வரத்தாகிறது. நேற்று முன்தினம் கிலோ, 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, 25 ரூபாய் முதல் 30 ரூபாய் என நேற்று உயர்ந்தது. இதேபோல் பல்வேறு காய்கறிகளின் விலையும் நேற்று அதிகரித்தது.
நேற்று முன்தினம் கிலோ, ரூ.70க்கு விற்ற பீன்ஸ், 100 ரூபாய்; 30 ரூபாய்க்கு விற்ற கேரட், 50 ரூபாய்; 15 ரூபாய்க்கு விற்ற முள்ளங்கி, 30 ரூபாய்; 25 ரூபாய்க்கு விற்ற கத்தரிக்காய், 40 ரூபாய்; 30க்கு விற்ற வெண்டை மற்றும் பாவற்காய் நேற்று ரூ.40க்கும் விற்கப்பட்டது.

Advertisement