'மறக்க முடியாத தருணங்கள்' பழனிசாமி பகிர்ந்த 'ஜிபிலி' படங்கள்
சென்னை: 'மறக்க முடியாத தருணங்கள்' என குறிப்பிட்டு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பகிர்ந்த, 'ஜிபிலி' பாணி படங்கள், வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வரும், 'சாட்ஜிபிடி' செயலியை உலகெங்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
புகைப்படங்களை, 'ஸ்டுடியோ ஜிபிலி' பாணி ஓவியங்களாக மாற்றும் ஜிபிடி 4.0 என்ற தொழில்நுட்பத்தை, சாட்ஜிபிடி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இதை பயன்படுத்தி, ஸ்டுடியோ ஜிபிலி பாணியிலான பிரதமர் மோடியின் படங்கள், 'பேஸ்புக், எக்ஸ்' போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ஸ்டூடியோ ஜிபிலி பாணி படங்களை பகிர்ந்தனர்.
லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, சென்னையில் தி.மு.க., நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்டோர் குழு புகைப்படத்தை, ஜிபிலி பாணி ஓவியமாக, தி.மு.க.,வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'மறக்க முடியாத தருணங்கள்' என குறிப்பிட்டு, ஸ்டூடியோ ஜிபிலி பாணி ஓவியங்களை வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
நெல் வயலில் விவசாயிகளை நேரில் சந்திப்பது, மாலை அணிவித்து பெண்கள் பாராட்டுவது, குடைபிடித்துக் கொண்டு மழை பாதிப்புகளை பார்வையிடுவது, கொரோனா காலக்கட்டத்தில் டாக்டர்களுடன் இருப்பது என, நான்கு படங்களை, ஸ்டூடியோ ஜிபிலி பாணி ஓவியங்களாக மாற்றி, அதை பழனிசாமி பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட பதிவில், 'தமிழகத்தின் இதயத்திலிருந்து, ஸ்டூடியோ ஜிபிலி உலகத்திற்கு, என் மறக்க முடியாத தருணங்கள் காலத்தால் அழியாத கலை வடிவில்' என்று கூறியுள்ளார்.
மேலும்
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
மோடியை சசி தரூர் புகழ்வதற்கு காரணம் என்ன; பா.ஜ., எம்.எல்.ஏ., கூறுவது இதுதான்!
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!