கவர்னர் பாதுகாப்பு வாகனம் மீது பைக் மோதல்; மாணவர் காயம்

1

சென்னை : கவர்னர் ரவியின் பாதுகாப்பு வாகனம் மீது, பைக்கில் மோதிய மாணவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


தமிழக கவர்னர் ரவி, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, திருச்சியிலிருந்து விமானத்தில் சென்னை வந்தார். அவருக்கு, 'இசட்' பிரிவு பாதுகாப்பு இருப்பதால், அவர் வரும் வாகனத்துக்குப் பின், பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து வருவது வழக்கம்.


'கான்வாய்' எனப்படும் பாதுகாப்பு வாகனங்கள், இரவு, 7:30 மணிக்கு ராஜ்பவனில் இருந்து புறப்பட்டு, ஜி.எஸ்.டி., சாலை வழியாக, சென்னை விமான நிலைய வி.ஐ.பி., கேட் பகுதிக்கு வந்தன.


அப்போது, பல்லாவரத்தில் இருந்து கிண்டி நோக்கி, 'பல்சர்' பைக் ஒன்று வேகமாக வந்தது. அதிவேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர், கவர்னர் கான்வாய் போலீஸ் வாகனம் மீது மோதி விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை, மீனம்பாக்கம் போக்குவரத்து போலீசார் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


விசாரணையில், அந்த இளைஞர் பரங்கிமலையை சேர்ந்த சந்தோஷ், 24, என்பதும், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி யில், 'பிசியோதெரபி' படிப்பதும் தெரியவந்தது.

Advertisement