பெண்ணை மிரட்டிய போலீஸ் ஏட்டு 'சஸ்பெண்ட்'

ஆத்துார் : பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் ஏட்டை, 'சஸ்பெண்ட்' செய்து துாத்துக்குடி எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் சரவணன், 45.
இவர், தெற்கு ஆத்துார் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி வந்தார். பின், இருவருக்கும் திடீரென பிரச்னை ஏற்பட்டது. அந்த பெண் ஆத்துார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
குடிபோதையில் இருந்த ஏட்டு சரவணன், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்து, புகாரை திரும்பப் பெற வேண்டும் என, கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண், ஆத்துார் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தார். போலீசார், எஸ்.பி.,க்கு அறிக்கை தாக்கல் செய்தனர். சரவணனை, 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் நேற்று உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து (1)
Padmasridharan - சென்னை,இந்தியா
02 ஏப்,2025 - 10:20 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
மோடியை சசி தரூர் புகழ்வதற்கு காரணம் என்ன; பா.ஜ., எம்.எல்.ஏ., கூறுவது இதுதான்!
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
Advertisement
Advertisement