சிறுவனிடம் மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது

தஞ்சாவூர் : தஞ்சாவூரில், சிறுவனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, மொபைல் போனை பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், நேற்று முன்தினம் இரவு, உடல் நிலை பாதிக்கப்பட்ட தன் தந்தையை சிகிச்சைக்காக, ஆம்புலன்சில் ஏற்றி தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சிறுவன் டூ-வீலரில், மருத்துவக் கல்லுாரிக்கு சென்றபோது, எதிரே மற்றொரு டூ-வீலரில் வந்த மூன்று பேர், சிறுவனின் டூ-வீலரை வழிமறித்து நிறுத்தி, அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, மொபைல் போனை பறித்து தப்பினர்.

சிறுவன் புகாரில், தஞ்சாவூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, தஞ்சாவூர், பாரதிதாசன் நகரை சேர்ந்த நந்தகுமார், 25, முருகன், 37, சுதாகர், 22, ஆகிய மூவரை கைது செய்தனர்.

Advertisement