என்கவுன்டரில் கொலையான ரவுடி உடல் நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை
கடலுார்: கடலுார் அருகே என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழிப்பறி கும்பல் தலைவன் உடல், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில், நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில், கடலுார் அருகே நேற்று முன்தினம் அதிகாலை 6 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்து, லாரி டிரைவர் உட்பட 3 பேரை கத்தியால் வெட்டி பணம், மொபைல் போனை பறித்து சென்றது.
எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்பேரில், வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி, போலீசார் தீவிர சோதனை வேட்டையில் ஈடுபட்ட போது, கடலுார் வில்வநகர் அருகே பதுங்கியிருந்த கொள்ளைக் கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதில், முக்கிய குற்றவாளியான புதுச்சேரி திலாசுபேட்டையை சேர்ந்த ரவுடி விஜய் என்கிற மொட்டை விஜய், 19; எம்.புதுார் முந்திரிதோப்பில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
உடனே போலீசார் விரைந்து சென்று அவரை மடக்கி பிடிக்கும்போது, தான் வைத்திருந்த கத்தியால் போலீசார் கணபதி, கோபி ஆகியோரை வெட்டிவிட்டு தப்பியோடினார். அருகில் இருந்த இன்ஸ்பெக்டர் சந்திரன் விஜயை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் விஜய் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார், விஜயின் உடலை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
நேற்று மாலை, நெய்வேலி நீதிபதி பிரவீன்குமார் முன்னிலையில் டாக்டர்கள் செல்வகுமார், அருண்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
பின், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும்
-
அமெரிக்காவின் புதிய வரி உயர்வு:பின்னலாடை ஏற்றுமதி பிரகாசிக்க வாய்ப்பு
-
உத்திரமேரூரில் புறவழிச்சாலை பணி மந்தம் தொடரும் போக்குவரத்து நெரிசலால் அவதி
-
சமூக வலைதளத்தை குழந்தைகள் பயன்படுத்த தடை கேட்ட மனு தள்ளுபடி
-
ஓய்வூதியர் அமைப்பினர் காஞ்சியில் ஆர்பாட்டம்
-
மாவட்ட தொழில் மையங்களில் பொது மேலாளர் பணியிடங்கள் காலி தமிழகத்தில் திட்டப்பணிகள் பாதிப்பு
-
பராமரிப்பு இல்லாத அரசு பேருந்துகள் தடம் எண் தெரியாமல் பயணியர் தவிப்பு