மும்மொழி கல்விக் கொள்கைக்கான பா.ஜ., கையெழுத்து இயக்கம் 35 லட்சம் பேர் ஆதரவு

17


சென்னை : தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கை வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக பா.ஜ., சார்பில், 'சம கல்வி எங்கள் உரிமை' என்ற கையெழுத்து இயக்க நிகழ்ச்சி, கடந்த மாதம் துவங்கியது.


மே மாதம் வரை, ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கப்பட இருப்பதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இதற்காக, பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாக சென்று, மக்களிடம் நேரடியாக கையெழுத்து பெற்று வருகின்றனர். மேலும், 'புதிய கல்வி' எனும் இணையதளம் வாயிலாகவும் கையெழுத்து வாங்கி வருகின்றனர். இந்த இயக்கத்தில் பங்கேற்று, நேற்று வரை 35 லட்சம் பேர் கையெழுத்திட்டு உள்ளனர்.

Advertisement