14 வயது மகளுக்கு நடந்த பாலியல் தொல்லை; புகார் தெரிவித்த பெண் போலீசிற்கு மிரட்டல்

விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே அரசு பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படிக்கும், பெண் போலீசின் 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் சர்க்கரைதாஸ்,48 மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்டசபை நடப்பதால் இவ்விவகாரத்தை கிளற வேண்டாம் என பெண் போலீசை அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.
இப்பள்ளியில் மார்ச் 26ம் தேதி தலைமையாசிரியர் சர்க்கரைதாஸ் மாணவியரை கண்டிப்பது போல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதில் பாதிக்கப்பட்ட மாணவியரில் ஒருவர் பெண் போலீசின் மகள். இதுகுறித்து தாயாரிடம் கூற, மார்ச் 27 ம் தேதி பள்ளிக்கு சென்று தலைமையாசிரியரிடம் பெண் போலீஸ் கேட்டார். பள்ளி தரப்பில் மழுப்பலான பதில்களை கூறி அனுப்பி வைத்தனர். இதன்காரணமாக 7ம் வகுப்பு மாணவியர் மூவர், சைல்டு லைனுக்கு(1098) புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விசாரித்தபோது, பெண் போலீசின் மகள் தவிர மற்ற இரு மாணவியரும் 'வெளியே தெரிந்தால் தங்களது படிப்பு பாதிக்கும் என பெற்றோர் தெரிவித்ததால் புகார் தெரிவிக்க விரும்பவில்லை' ↔தொடர்ச்சி ௫ம் பக்கம்எனக்கூறினர். இதனால் பெண் போலீசின் மகளிடம் விசாரணை நடந்தது. வகுப்பறையில் முதுகில் அடிப்பது போல் தலைமையாசிரியர் தடவியதாகவும், காலால் தனது காலை உரசியதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும் எழுத்துப்பூர்வமாக மாணவி தெரிவித்தார். இதன்அடிப்படையில் தலைமையாசிரியர் மீது குழந்தைகள் நல அலுவலர் புகார் அளித்தார். சர்க்கரைதாஸ் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
///தனது மகளுக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு பெண் போலீஸ் கொண்டு சென்றார். சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதாலும், பெண் போலீசின் மகளுக்கே பாதுகாப்பில்லை என எதிர்க்கட்சியினர் பிரச்னை கிளப்புவார்கள் என்பதாலும், 'இப்பிரச்னையை கிளற வேண்டாம். மீறும்பட்சத்தில் மகளை துாண்டிவிட்டதாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். இதனால் பெண் போலீசும் பயந்து யாரிடமும் சொல்லாமல் தவிர்த்துள்ளார். ஆனால் சைல்டு லைன் குறித்த விழிப்புணர்வால் மாணவியர்களே தாங்களாக தொடர்பு கொண்டு இப்பிரச்னையை வெளியே கொண்டு வந்துள்ளனர்.//
நமது சிறப்பு நிருபர்






மேலும்
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
மோடியை சசி தரூர் புகழ்வதற்கு காரணம் என்ன; பா.ஜ., எம்.எல்.ஏ., கூறுவது இதுதான்!
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு