மியான்மரில் தொடரும் மீட்பு பணிகள்; இடிபாடுகளிலிருந்து கர்ப்பிணி மீட்பு

மண்டாலே : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டட குவியல்களை அகற்றுவது உள்ளிட்ட மீட்புப் பணிகள் மியான்மரில் தொடர்ந்து நடக்கின்றன. இதற்கிடையே, கட்டட இடிபாடுகளில் இருந்து, 60 மணி நேரத்துக்கு பின், கர்ப்பிணி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
நம் அண்டை நாடான மியான்மரில், கடந்த மார்ச் 29ம் தேதி, ரிக்டர் அளவுகோலில், 7.7 அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில், 2,00-0க்கும் மேற்பட்டோர், பலியானதாக கூறப்படுகிறது. இதைத் தவிர, 3,000க்கும் மேற்பட்டோர் காணவில்லை. இவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டு, மூன்று நாட்களை கடந்துள்ள நிலையில், தற்போதுதான் மீட்புப் பணிகள் வேகமெடுத்துள்ளன.
சாலைகளில் பெரிய வெடிப்புகள் ஏற்பட்டது உள்ளிட்ட காரணங்களால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது கனரக வாகனங்கள் வாயிலாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பல நாடுகளில் இருந்தும் வந்துள்ள மீட்புப் பணி நிபுணர்கள், இந்தப் பணியில் ஈடுபட்டுஉள்ளனர். நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த ஒரு ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து, கர்ப்பிணி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இடிபாடுகளில், 60 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கியிருந்த நிலையில், மீட்புப் படையினர் நேற்று முன்தினம் அவரை மீட்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து மீட்புப் படையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்க வாய்ப்பு உள்ளதால், தங்களுடைய பணியை தீவிரப்படுத்திஉள்ளனர்.
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு, அதன் அண்டை நாடான தாய்லாந்திலும் உணரப்பட்டது. குறிப்பாக தலைநகர் பாங்காக்கில் பல கட்டடங்கள் சேதமடைந்தன. பாங்காக்கில், சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கட்டி வந்த, 30 மாடி கட்டடம், இந்த நிலநடுக்கத்தில் சரிந்து விழுந்து தரைமட்டமானது.இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கட்டடத்தின் இடிபாடுகள் உள்ள பகுதியை, தடை செய்யப்பட்ட பகுதியாக போலீசார் அறிவித்துள்ளனர்.இந்த சூழ்நிலையில், சீன நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர், அங்கு சென்று, 34 கோப்புகளை அள்ளிச் செல்ல முயன்றனர். அவர்களை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சீன நிறுவனத்தின் கட்டுமானத்தின் தரம் குறித்து சந்தேகம் எழுந்துள்ள நிலையில், கோப்புகளை நிறுவன அதிகாரிகள் எடுக்க முயன்றது, அதை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்தக் கட்டடத்தின் இடிபாடுகளில், 70க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, மீட்புப் பணிகளும் ஒரு பக்கம் நடந்து வருகின்றன.
மேலும்
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
மோடியை சசி தரூர் புகழ்வதற்கு காரணம் என்ன; பா.ஜ., எம்.எல்.ஏ., கூறுவது இதுதான்!
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!