ஜெயின் கோவிலில் யுகாதி விழா

செஞ்சி: அகலுார் ஜெயின் கோவிலில் யுவாதி பண்டிகை தேரோட்டம் நடந்தது.

செஞ்சி அடுத்த அகலூர் 1008 ஆதிநாத பகவான் ஜினாலயத்தில் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு யுகாதி பண்டிகை தேரோட்ட விழா நடந்தது.

தொடர்ந்து பார்சுவநாதர், தரணேந்திரர், பத்மாவதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், பஞ்சாமிர்த பூஜையும் செய்தனர். பின், தரணேந்திரர், பத்மாவதி அம்மன் தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது.

திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement