வாலிபரை தாக்கிய போதை ஆசாமிக்கு வலை

விழுப்புரம்: காணை அருகே வாலிபரை தாக்கிய போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

கண்டாச்சிபுரம் அடுத்த ஆயந்தூரை சேர்ந்தவர் பிரகாஷ், 35; நேற்று முன்தினம் அதே பகுதி லட்சுமி என்பரது வீட்டின் முன்பு குடிபோதையில் தனது மனைவி ஆனந்தஜோதியிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.

அதனை அதே பகுதியைச் சேர்ந்த நரேஷ், 25; தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த பிரகாஷ் செங்கல்லால் நரேைஷ தாக்கினார். காணை போலீசார் பிரகாஷ் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement