12 பேரை கடித்த நாய் அடித்து கொன்ற மக்கள்

செஞ்சி: செஞ்சி அருகே 12 பேரை கடித்து குதறிய நாயை கிராம மக்கள் அடித்து கொன்றனர்.

செஞ்சி அடுத்த மேல்சித்தாமூர் கிராமத்தில் நேற்று மதியம் பிள்ளையார் கோவில் தெரு, மேட்டுத் தெரு, திரவுபதியம்மன் கோவில் தெரு வழியாக நடந்து சென்றவர்களை அப்பகுதியில் திரிந்த நாய் கடித்தது.

இதில், பொன்னம்மாள், முருகேசன், அன்னம்மாள், செல்வி, தனம், கஸ்துாரி, ஸ்வேதா, தர்மன், நாகம்மாள், சங்கர் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.

இவர்கள் மேல்சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதே நாய் 2 கன்று குட்டிகளையும் கடித்து காயப்படுத்தியது.

இதனால் பீதியடைந்த கிராம மக்கள் நேற்று மாலை அந்த நாயை அடித்துக் கொன்றனர்.

Advertisement