சிந்தாமணி ஓம்சக்தி நகரில் சாலை பொதுமக்கள் கோரிக்கை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த அய்யூர் அகரம் மதுரா சிந்தாமணியில் சாலை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விக்கிரவாண்டி சிந்தாமணியில் விரிவாக்க பிரிவு ஓம்சக்தி நகரில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் மழைக் காலங்களில் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

பணிக்கு சென்று இரவு வீடு திரும்பும் விவசாயிகள், பொதுமக்கள் சாலை வசதி இல்லாததால் பாம்பு மற்றும் விஷ பூச்சி கடிக்கு ஆளாகின்றனர். இப்பகுதிக்கு சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement