சமுதாய வளைகாப்பு விழா

மயிலம்: மயிலம் ஒன்றிய ரெட்டணை ஊராட்சியில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

ஒன்றிய கவுன்சிலர் கிஷோர் வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், சிவக்குமார் தலைமை தாங்கினார். மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி முன்னிலை வகித்தார். மயிலம் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சேதுநாதன் மாசிலாமணி, தீர்மான குழு உறுப்பினர் சிவா, ஒன்றிய செயலாளர் மணிமாறன், செழியன், ஒன்றிய துணைச் சேர்மன் புனிதா ராமஜெயம் உட்பட பலர் பங்கேற்றனர். மயிலம் ஒன்றியத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

ஒன்றிய கவுன்சிலர்கள் கண்ணன் பரிதா சம்சுதீன், பா.ம.க., ஒன்றிய செயலாளர் சண்முகம், மாவட்ட விவசாய அணி சுப்ரமணி, மாவட்ட பிரதிநிதி சேகர், ஒன்றிய விவசாய அணி பாஸ்கர் உட்பட கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

செஞ்சி



வல்லம் ஒன்றியம் நாட்டார் மங்கலத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. ஒன்றிய சேர்மேன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஆரணி எம்.பி., தரணிவேந்தன், மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மனோசித்ரா வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு 100 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசை பொருட்களை வழங்கி, வளைகாப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு உடல் உழைப்பு சமூக நலன் பாதுகாப்பு உறுப்பினர் சிவா, பி.டி.ஓ.,க்கள் உதயக்குமார், இளங்கோவன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் துரை, இளம்வழுதி, மாவட்ட கவுன்சிலர் அன்பு செழியன், தொழிலாளர் அணி அமைப்பாளர் தமிழரசன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேற்பார்வையாளர் வனிதா நன்றி கூறினார்.

Advertisement