மயிலத்தில் ஊரணி பொங்கல் 

மயிலம்: மயிலம் மயிலியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் ஊரணி பொங்கல் வைத்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.

இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 24ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று 31ம் தேதி கிராம பெண்கள் கோவில் வளாகத்தில் ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர்.இரவு 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவமும், 10:00 மணிக்கு திருத்தேரில் அம்மன் வீதியுலாவும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertisement