'விளைச்சலும், விலையும் இருக்கு' எலுமிச்சை விவசாயிகள் மகிழ்ச்சி
பேரையூர்: சுட்டெரிக்கும் வெயிலால் தேவை அதிகரித்து எலுமிச்சை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பேரையூர் பகுதி மக்களின் பலருக்கு முக்கிய தொழில் விவசாயம். நுாற்றுக்கணக்கான ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தினமும் வருமானம் தரும் கற்பக விருட்சமாக விவசாயிகள் இப்பயிரை கருதுகின்றனர்.
பேரையூர், தும்மநாயக்கன்பட்டி, சந்தையூர் பகுதி மண், தட்பவெப்ப நிலை எலுமிச்சை சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. கிலோ ரூ. 60க்கு வியாபாரிகளிடம் வாங்கப்படுகிறது.
விவசாயிகள் கூறுகையில், ''எலுமிச்சை சாகுபடி நல்ல லாபம் தரும் விவசாயம். ஆட்கள் கூலி குறைவு. கடந்த மாதம் கிலோ ரூ.25க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ரூ.60க்கு விலை போகிறது. நல்ல விளைச்சலும் உள்ளது.
தினமும் எலுமிச்சை பறிப்பதால் போதிய லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சியாக உள்ளது'' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
மோடியை சசி தரூர் புகழ்வதற்கு காரணம் என்ன; பா.ஜ., எம்.எல்.ஏ., கூறுவது இதுதான்!
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
Advertisement
Advertisement