திருப்பயண சிறப்பு வழிபாடு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி - ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதி வேளாங்கண்ணி திருத்தலத்தில் தேனி மறைமாவட்ட பக்தர்கள் சார்பில் தவக்கால திருப்பயண சிறப்பு திருப்பலி நடந்தது.

நற்கருணை ஆராதனை, ஒப்புரவு வழிபாட்டை சிந்தலைச்சேரி உதவிப் பங்கு பணியாளர் சதீஷ் துவக்கி வைத்தார். சிலுவைப்பாதை ஊர்வலத்தை தேனி மறைமாவட்ட உதவிப் பங்கு பணியாளர்கள் நடத்தினர். தேனி மறைமாவட்ட அதிபர் முத்து சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியை நடத்தினார்.

கம்பம் பங்குப்பணியாளர் பாரிவளன் மறையுரை வழங்கினார்.

மதுரை, தேனி மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், புனிதவளனார் சபை, அமலபரி புதல்வியர்சபை, அன்பியங்கள் பக்த அமைப்புகளின் பொறுப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உசிலம்பட்டி குழந்தை யேசு ஆலய பங்குப்பணியாளர் இக்னேசியஸ் ஸ்டாலின் உட்பட பலர் செய்திருந்தனர்.

Advertisement