போதை பொருள் கண்டறிய புதிய மோப்ப நாய்

கடலுார்; மாவட்டத்தில் போதைப் பொருட்களை கண்டறிய புதியதாக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் போதைப் பொருட்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் சேர்ப்பதற்கு, தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அதன்பேரில் கடலுார் மாவட்ட காவல்துறைக்கு ஒரு மோப்ப நாய் வழங்கப்பட்டுள்ளது. எஸ்.பி.,ஜெயக்குமார், புதிய மோப்ப நாய்க்கு ராக்கி என பெயரிட்டார். மோப்ப நாய்க்கு, கோவை பயிற்சி மையத்தில் 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடிந்து மாவட்ட மோப்ப நாய் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டு, போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இடங்களை கண்டுபிடிக்க போலீசாருக்கு உதவியாக சேர்க்கப்பட உள்ளது. டி.எஸ்.பி., சார்லஸ், மோப்ப நாய் பிரிவு தலைமைக் காவலர் இளங்கோவன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Advertisement