ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கடலுார்; வண்டிப்பாளையம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கடலுார், வண்டிப்பாளையம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 28ம் தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகளுடன் துவங்கியது. 29ம் தேதி, பாடலீஸ்வரர் கோவில் சிவகரகுளத்தில் இருந்து சிவகர தீர்த்தம் எடுத்துவரப்பட்டு, யாக சாலை பூஜைகள் துவங்கியது.

நேற்று காலை மகா தீபாராதனைக்குப்பின் யாகசாலையிலிருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு, 9.50 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் கடலுார் வி ஸ்கொயர் மால் உரிமையாளர் டாக்டர் அனிதா ரமேஷ், பாடலி சங்கர், இயக்குனர் சரவணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இரவு முருகன் திருக்கல்யாணம், அம்மன் வீதியுலா நடந்தது.

Advertisement