யுகாதி கொண்டாட்டம்

ராஜபாளையம்: தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருவிழாவை முன்னிட்டு ராஜபாளையம் சுற்றுவட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

ராஜபாளையம் பழையபாளையம் பெரிய சாவடி முன்பு முதல் நாள் இன்னிசை கச்சேரி நடந்தது. ராமசாமி கோயிலில் சிறப்பு ஹோமம் அன்னதானம் நடந்தது. மாலை என்.ஆர்.கே மண்டபத்தில் ராமநாதசுவாமி அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நிகழ்ச்சியும் பெரிய சாவடி முன்பு வான வேடிக்கைகள் நடைபெற்றன.

l சிங்கராஜா கோட்டை சார்பில் இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் சாவடி தலைவர் ராம் சிங் ராஜா முன்னிலையில் நடைபெற்றது. திருவனந்தபுரம் கோட்டை சங்கர் ராஜா கோட்டை பகுதிகளிலும் இளைஞர் சங்கத்தினர் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

l பொன்னகரம், பாரதி நகர் கவுரா நாயுடு நலச்சங்கம் சார்பில் யுகாதி விழா கொண்டாடப்பட்டது.

Advertisement