ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஏப்.3ல் திருக்கல்யாண கொடியேற்றம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா ஏப்.11ல் நடக்கிறது. ஏப்.3ல் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.
இதையொட்டி அன்று காலை 10:30 மணிக்குமேல் கொடியேற்றம் நடக்கிறது. விழா நாட்களில் காலையில் மண்டபம் எழுந்தருளலும், இரவு வீதியுலாவும் நடக்கிறது.
ஏப்.7ல் இரவு 7:00 மணிக்குமேல் கருடவாகனத்தில் எழுந்தருளல், ஏப்.11பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை 7:05 மணிக்கு செப்புதேரோட்டம், மாலை 5:30 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண வைபவமும், ஏப்.15.,இரவு 6:00 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் புஷ்பயாகமும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
Advertisement
Advertisement