பொருட்காட்சி துவக்க விழா

அருப்புக்கோட்டை: எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பொருட்காட்சியை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். பள்ளி செயலர் காசி முருகன் வரவேற்றார். முதல் விற்பனையை முன்னாள் ஒன்றிய தலைவர் சுப்பாராஜ் துவக்கி வைக்க, முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம் பெற்று கொண்டார். பொருட்காட்சி 22 நாட்கள் நடைபெறும். தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள், எஸ்.பி.கே., கல்லூரி, பள்ளி நிர்வாகிகள் பொருட்காட்சி கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி செயலர் சங்கரசேகரன் நன்றி கூறினார்.

Advertisement