வயல்வெளி வைக்கோல் தீயில் எரிந்து சேதம்

நரிக்குடி: நரிக்குடி டி.வேலங்குடியில் வயல்வெளிகளில் கிடந்த வைக்கோல்களில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் முற்றிலும் எரிந்து சேதமானது.

நரிக்குடி டி.வேலங்குடியில் ஏராளமான ஏக்கரில் நெல் பயிரிட்டு இருந்தனர். அறுவடை செய்து நெல்களை விவசாயிகள் பிரித்து எடுத்துச் சென்று, வைக்கோல்களை ஆங்காங்கே போட்டுவிட்டு சென்றனர். இந்நிலையில் 50 ஏக்கரில் அறுவடை செய்த வைக்கோல்கள் மீது மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர். தீ மள மளவென பற்றி எரிந்து, பல கி.மீ. தூரம் வரை பரவியது.

அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வயல்வெளியில் வாகனம் செல்ல முடியவில்லை. இதையடுத்து வீரர்கள் தீ யை பச்சை செடிகளை பறித்து, மக்களுடன் சேர்ந்து அணைக்க போராடினர். 2 கி.மீ., தூரம் வரை எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் வைக்கோல்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement