பால் உற்பத்தியாளர்கள் கடை மராமத்து பணிக்காக மூடும் அறிவிப்பு பங்குனிப்பொங்கலுக்கு பின் செய்ய எதிர்பார்ப்பு
விருதுநகர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் கேண்டீன் மராமத்து பணியை பங்குனிப்பொங்கலுக்கு பின் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் க்யூ, 133 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினரால் 50 ஆண்டுகளாக கேண்டீன் நடத்தப்படுகிறது. இங்கு மற்ற கடைகளை விட காபி, தேனீர், பால் பொருட்களின் விலை குறைவு என்பதால் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களும், பயணிகள் பலரும் அருந்தி செல்கின்றனர்.
இந்த கடையில் தினமும் 20 லிட்டர் பால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கடந்த 6 மாத காலமாக போதிய லாபம் இல்லாமல் செயல்பட்டுள்ளது. ஆனால் கடைக்கு தரை வாடகையாக ரூ. 6200 செலுத்த வேண்டியுள்ளது. இதனால் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது மராமத்து பணிக்காக 10 நாட்கள் மூடுவதாக அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
விருதுநகரில் பங்குனிப் பொங்கல் விழா நடக்கவுள்ள நிலையில் பஸ் ஸ்டாண்டிற்கு வெளியூர் பயணிகள், பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் மராமத்து பணியை பங்குனிப் பொங்கல் முடிந்த பின்பு மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும்
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி