சாத்துார் எட்டூர் வட்டம் டோல்கேட்டில் இன்று முதல் புதிய சுங்க கட்டண விபரம்
சாத்துார்: சாத்துார் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள எட்டூர் வட்டம் டோல்கேட் ஏப்ரல் 1 இன்று முதல் சுங்க கட்டணம் உயருகிறது.புதியதாக உயர்த்தப்பட்டுள்ள சுங்க கட்டணத்தின் விவரம் பின்வருமாறு:
கார் ஜீப் வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஒரு முறை சென்று வர பழைய கட்டணம் ரூ.100 ஆக இருந்தது ரூ.105 ஆகவும் 24 மணி நேரத்தில்இரு முறை வந்து செல்ல பழைய கட்டணம் ரூ. 150 ஆக இருந்தது ரூ. 160 ஆகவும் ஒரு மாதத்தில் 50 தடவை வந்து செல்ல ரூ.3385 ஆக இருந்த கட்டணம் ரூ. 3510 ஆகவும் உள்ளூர் பதிவு வாகனங்களுக்கான கட்டணம் ரூ. 50 ல் இருந்து ரூ. 55 ஆகவும்,பாஸ்டாக் அல்லாத வாகன கட்டணம் ரூ. 200ல் இருந்து ரூ. 210 ஆக உயர்ந்துள்ளது.
இலகு ரக சரக்கு வாகனம் பழைய கட்டணம் ரூ.165 ல் இருந்து ரூ.170 ஆகவும், 24 மணி நேரத்தில்இரு முறை வந்து செல்ல பழைய கட்டணம் ரூ.245 இருந்து ரூ.255 ஆகவும், மாதத்தில் 50 தடவை வந்து செல்ல பழைய கட்டணம் ரூ.5470ல் இருந்து ரூ. 5665 ஆகவும், உள்ளூர் பதிவு வாகனம் பழைய கட்டணம் ரூ. 80ல் இருந்து ரூ.85 ஆகவும், பாஸ்டாக் அல்லாத வாகனம் பழைய கட்டணம் ரூ. 330ல் இருந்து ரூ. 340 ஆகவும்,உயர்ந்துள்ளது.
பஸ் மற்றும் கனரக வாகனங்கள் பழைய கட்டணம் ரூ. 345 ல் இருந்து ரூ. 355ஆகிறது.24 மணி நேரத்தில் இரு முறை வந்து செல்ல பழைய கட்டணம் ரூ.515 தற்போது ரூ.535 ஆகிறது.ஒரு மாதத்தில் 50 தடவை வந்து செல்ல பழைய கட்டணம் ரூ.11465ல் இருந்து ரூ.11870 ஆகிறது.உள்ளூர் பதிவு பெற்ற வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ. 170 ல் இருந்து ரூ.180 பாஸ்டாக் அல்லாத வாகனங்கள் பழைய கட்டணம் ரூ. 690 ல் ரூ.710 ஆக உயர்கிறது.
3 அச்சு கனரா வாகன கட்டணம் ரூ. 375 ல் இருந்து ரூ.390 ஆகவும்,24 மணி நேரத்தில் இருமுறை வந்து செல்ல பழைய கட்டணம் ரூ. 565 ல்இருந்து ரூ.585 ஆகவும், மாதம் 50 தடவை வந்து செல்ல ரூ. 12505 ல் இருந்து ரூ. 12950 ஆகவும், உள்ளூர் பதிவு பெற்ற வாகனங்கள் பழைய கட்டணம் ரூ.190ல் இருந்து ரூ.195 ஆகவும்,பாஸ்ட் டாக் அல்லாத வாகனத்திற்கு பழைய கட்டணம் ரூ .750 ல் இருந்து ரூ. 780 ஆகவும் உயர்கிறது.
4 முதல் 6 அச்சு வாகனங்கள் பழைய கட்டணம் ரூ.540ல் இருந்து ரூ.560 ஆகவும், 24 மணி நேரத்தில் இரு முறை வந்து செல்ல ரூ 810 ல் இருந்து ரூ 840 ஆகவும், மாதத்தில் 50 தடவை வந்து செல்ல ரூ17980 ல் இருந்து ரூ 18615 ஆகவும், உள்ளூர் பதிவு பெற்ற வாகனங்களுக்கு ரூ 270 ல் இருந்து ரூ280 ஆகவும்,பாஸ்ட் டாக் அல்லாத வாகனங்களுக்கு ரூ1080 ல் இருந்து ரூ 1120 ஆகவும், உயர்கிறது.
7 அச்சு வாகனங்கள் அதற்கு மேல் அச்சு உள்ள வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ 655, ல் இருந்து ரூ 680 ஆகவும், 24 மணி நேரத்தில் இரு முறை வந்து செல்ல ரூ985ல் இருந்து 1020 ஆகவும், மாதம் 50 தடவை வந்து செல்ல பழைய கட்டணம் 21885 ல் இருந்து ரூ 22665 ஆகவும், உள்ளூர் பதிவு பெற்ற வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ.330ல் இருந்து ரூ340 ஆகவும்,பாஸ்ட் டாக் அல்லாத வாகனங்களுக்கு 1310 ல் இருந்து ரூ 1360 ஆகவும் கட்டணம் உயர்கிறது.
மேலும்
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி