விவசாயிகள் அடையாள எண் பதிவு ஏப்.15 வரை கால அவகாசம்
சிவகங்கை: பிரதமரின் கிஷான் திட்டத்தில் விவசாயிகள் நிதி உதவிக்கான அடையாள எண் பெற பொது சேவை மையத்தில் விவசாயிகள் பதிவு செய்வதற்கு ஏப்.15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கவுரவ நிதி உதவி பெற விவசாயிகள்தங்கள் நில உடமை விபரங்களுடன், அந்தந்த பகுதி மத்திய அரசின் அனுமதி பெற்ற பொது சேவை மையங்களில் பதிவு செய்து, அதற்கான அடையாள எண்ணை பெற வேண்டும். இதற்காக மார்ச் 31 வரை மட்டுமே கால அவகாசம் அளித்திருந்தனர்.
இந்த அடையாள எண் பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே மத்திய அரசு வழங்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகை தொடர்ந்து வழங்கப்படும்.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறையினர் விவசாயிகளிடம் நில உடமை விபரங்களை பெற்று பெயர்களை பதிவு செய்து வருகின்றனர். அதே போன்று மத்திய அரசிடம் அங்கீகாரம் பெற்ற பொது சேவை நிறுவனங்களிலும் விவசாயிகள் நேரடியாக பதிவு செய்து, அடையாள எண்ணை பெறலாம்.
மாவட்ட அளவில் உதவி தொகை பெற 1 லட்சத்து 15 ஆயிரத்து 858 விவசாயிகள் தகுதி பெற்றுஉள்ளனர். இவர்களில் மார்ச் 31 வரை 81 ஆயிரத்து 373 விவசாயிகள் பதிவு செய்து, அடையாள எண் பெற்றுள்ளனர்.
இவர்களில் ஏற்கனவே 68,000 விவசாயிகள் பிரதமரின் உதவி தொகை பெற்று வருகின்றனர். இன்னும் அடையாள எண் பெற 34 ஆயிரத்து 483 பேர் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
ஏப். 15 வரை கால அவகாசம்
வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில், மத்திய, மாநில அரசின் அனைத்து விவசாய திட்டங்களிலும் பயன்பெறும் நோக்கில், அடையாள எண் அவசியமாகும். இதனால், எஞ்சிய விவசாயிகளும் நில ஆவணங்களுடன், பெயர்களை பதிவு செய்து தனி அடையாள எண்ணை பெற, அரசு ஏப்., 15 வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த வாய்ப்பை விடுபட்ட அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி கொண்டு, தனி அடையாள எண் பெற வேண்டும், என்றார்.
மேலும்
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்