ரோட்டில் திரியும் மாடுகள்: நகராட்சி மெத்தனம்

சிவகங்கை: சிவகங்கையில் ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகளும் குதிரைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

கலெக்டர் அலுவலகவளாகம், திருப்புத்துார் ரோடு, அரண்மனை வாசல், பஸ் ஸ்டாண்ட், மதுரை முக்கு, நேரு பஜார், மஜித் ரோடு, காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மாடுகளும் குதிரைகளும் சுற்றி திரிகிறது.

மதுரை ரோடு சுண்ணாம்பு காளவாசல் பகுதி அரண்மனை வாசல், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள் ரோட்டிலேயே படுத்து கிடக்கிறது. வாகனங்களில் செல்வோர் அவற்றை கவனிக்காமல்விபத்துக்கு உள்ளாகின்றனர்.

திருப்புத்துார் ரோட்டில்கலெக்டர் அலுவலகம் ஆர்ச் பகுதியில் இரவு நேரங்களில் குதிரைகள் ரோட்டில் செல்பவர்களை கடிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

சிவகங்கை நகராட்சி நிர்வாகம் நகராட்சி பகுதிகளில் சுற்றி திரியும் குதிரைகளையும் மாடுகளையும் பிடித்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement