சிவகங்கையில் ரம்ஜான் கொண்டாட்டம்

சிவகங்கை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று சிவகங்கை-மதுரை ரோட்டில்உள்ள ஈத்கா மைதானத்தில்இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி, ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

சிவகங்கை நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசலை சேர்ந்த இஸ்லாமியர்கள் நேருபஜார் வாலாஜா நவாப் ஜூம்மா பள்ளிவாசலில் இருந்து பள்ளி வாசல் தலைவர் காஜாமுகைதீன் தலைமையில் ஊர்வலமாக மதுரை ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்திற்கு சென்றனர். சிறப்பு மவுலவி சுல்தான் ஹயிரி சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்.

தலைமை இமாம் முகம்மது பிலால் சிறப்பு தொழுகையை நடத்தினார். மன்சூர் உசேன் சிறப்பு பிரார்த்னை செய்தார். பின்னர் இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

* இளையான்குடியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பரமக்குடி ரோடு, மெயின் பஜார், சிவகங்கை ரோடு,புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களிலும்,செகப்பா திடலிலும் சிறப்பு தொழுகை நடந்தது.

* மானாமதுரை கண்ணார் தெரு ரயில்வே காலனி, ராஜகம்பீரம், இடைக்காட்டூர், முத்தனேந்தல் உள்ளிட்ட பல பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடந்தது.

* திருப்புத்துாரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடந்த சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

நேற்று காலை 8:00 மணிக்கு திருப்புத்துார் பெரிய பள்ளிவாசலில் ஜமாத் தலைவர்கள், பொறுப்பாளர்கள், நகர உலமாக்கள் உள்ளிட்டோர் ஒன்று கூடி, தக்பீர் தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அச்சுக்கட்டு ஈத்கா மைதானத்திற்கு வந்தனர்.

அங்கு நடந்த சிறப்பு தொழுகைக்கு மாவட்ட அரசு டவுன் காஜியும், திருப்புத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாமுமான முகமது பாரூக் ஆலீம் தலைமை வகித்தார். சிவகங்கை மாவட்ட அரசு டவுன் காஜி, குத்பா பேருரையாற்றினார். பள்ளிவாசல் இமாம்கள், ஜமாத்தார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement