திருப்புத்துாரில் ஏப்.18ல் ஜெயந்தன் பூஜை

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவர் சன்னதியில் ஏப்.18ல் ஜெயந்தன் பூஜை நடைபெறுகிறது.

இக்கோயிலில் தனி சன்னதியில் மூலவர் பைரவர் எழுந்தருளியுள்ளார். பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுவதால் பக்தர்களால் 'யோக பைரவர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். ஆண்டு தோறும் சித்திரை முதல் வெள்ளியன்று 'ஜெயந்தன் பூஜை' விழா நடைபெறுகிறது. முன்னர் இந்திரன் மகன் ஜெயந்தன் முனிவரால் சாபம் பெற்றார். இதனால் ஜெயந்தன் பைரவர் சன்னதியில் தவமிருந்து அவரது அருளால் பாவ விமோசனம் அடைந்தார்.

பைரவர் சன்னதி முன்பாக ஜெயந்தன் எழுந்தருளியுள்ளார். இதனையடுத்து 'ஜெயந்தன் பூஜை' என்ற பெயரில் மக்களால்பைரவருக்கு விழா எடுக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஏப்.18ல் ஜெயந்தன் பூஜை நடைபெறும். காலை 9:00 மணிக்கு அஷ்ட பைரவ யாக பூஜைகள் துவங்குகின்றன.தொடர்ந்து காலை 11:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை, மதியம் 12:00 மணிக்கு அபிேஷகம், மதியம் 1:00 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

இரவு 7:00 மணிக்கு திருநாள் மண்டபத்தில் குதிரை வாகனத்தில் பைரவர் எழுந்தருளி தீபாராதனை நடைபெறும். பின்னர் வேத,திருமுறை பாராயணத்துடன் திருவீதி உலா நடைபெறும்.

Advertisement