காட்சி பொருளான தண்ணீர் பந்தல்

சிவகங்கை: சிவகங்கை நகரில் அரசியல் கட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட தண்ணீர் பந்தல்கள்காட்சி பொருளாக மட்டுமே இருக்கிறதே தவிர குடிப்பதற்கு தண்ணீர் இல்லை.

கோடையை முன்னிட்டு மக்களின் தாகம் தணிக்க முக்கிய பகுதிகளில் அரசில் கட்சியினர் தண்ணீர் பந்தல் திறந்தனர்.

அதிக மக்கள் கூடும் பகுதிகளான பஸ் ஸ்டாண்ட், அரண்மனை வாசல், ராமச்சந்திர பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் இந்த தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தண்ணீர் பந்தல் திறக்கும்போது தடபுடலாக தண்ணீர், மோர், சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள், தர்பூசணி பழங்கள் என வழங்கப்பட்டது. பின்னர் மறுநாளே இந்த தண்ணீர் பந்தலில் குடிக்க தண்ணீர்கூட யாரும் வைப்பதில்லை. தண்ணீர் பந்தல்திறப்பது என்பது மக்களின் தாகம் தீர்க்கவே.

இதை திறந்த அரசியல் பிரமுகர்கள் பொறுப்பாளர்கள் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலை கோடை வெயில் முடியும் வரை முறையாக பராமரித்தாலே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கலாம்.

Advertisement