ஐ.டி., பூங்கா அமைக்க கடும் எதிர்ப்பு; ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது
ஹைதராபாத் : ஹைதராபாத் மத்திய பல்கலை வளாகத்தில் வனப்பகுதியை அழித்து, ஐ.டி., பூங்கா அமைக்கப்படுவதாக கூறி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததால் பதற்றம் நிலவுகிறது.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.
தலைநகர் ஹைதராபாதின் கன்சா கச்சிபவுளி பகுதியில், ஹைதராபாத் மத்திய பல்கலை உள்ளது. 2,300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பல்கலை வளாகம், பசுமைப்பகுதியாக பராமரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பல்கலையின் கிழக்குப் பகுதியில், 400 ஏக்கர் நிலத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா எனப்படும் ஐ.டி., பூங்கா அமைக்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
பசுமையான வனப்பகுதியை அழித்து, பன்னாட்டு ஐ.டி., நிறுவனங்களுக்கு அந்த இடத்தை கொடுப்பதா என, பல்கலை மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும், ஏல நடவடிக்கை, நிலத்தை சமப்படுத்தும் பணி என, அடுத்தடுத்து தொடருவதால், மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில், புல்டோசர், நிலத்தை சமப்படுத்தும் பொக்லைன் உள்ளிட்டவற்றை நேற்று முன்தினம் மாலை பல்கலை வளாகத்துக்கு வந்தன.
இதனால் ஆவேசமடைந்த மாணவர்கள், அந்த இடத்தில் குவிந்தனர். பொக்லைன்கள் மீது ஏறி நின்று, அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
அப்போது, போலீசாருக்கும் மாணவ - மாணவியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, 200க்கும் மேற்பட்ட மாணவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்